தமிழ் செவ்வாய் யின் அர்த்தம்

செவ்வாய்

பெயர்ச்சொல்

 • 1

  சூரியனிலிருந்து நாலாவதாகவும் பூமியை அடுத்தும் உள்ள கிரகம்.

  ‘செவ்வாயில் உயிர்கள் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை’
  ‘செவ்வாய் கிரகம் சூரியனிலிருந்து 22.79 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது’

 • 2

  மேற்கூறிய கிரகத்தின் பெயரால் குறிக்கப்படும், வாரத்தின் மூன்றாவது கிழமை.

  ‘செவ்வாய்க்கிழமை பொதுவாக சலூன்களுக்கு விடுமுறை’

 • 3

  சோதிடம்
  உடன்பிறந்தோர், ஆக்ரோஷம், ராணுவம், தீ, சிவப்பு நிறம், பவழம், தெற்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.