சொக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொக்கு1சொக்கு2

சொக்கு1

வினைச்சொல்சொக்க, சொக்கி

 • 1

  (ஒருவருடைய அழகு, திறமை முதலியவற்றால்) தன் வசம் இழத்தல்; கிறங்குதல்; மயங்குதல்.

  ‘அவளுடைய அழகிலும் அலங்காரத்திலும் அவன் சொக்கிநின்றான்’
  ‘பாட்டும் பாவமும் சொக்க வைத்தன’

 • 2

  (தூக்கத்தால் கண்கள்) செருகுதல்.

  ‘இரண்டு நாளாகத் தூங்கவில்லை. அதனால் கண் சொக்குகிறது’
  ‘எனக்குத் தூக்கம் சொக்குகிறது’

சொக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சொக்கு1சொக்கு2

சொக்கு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கன்னக் கதுப்பு.

  ‘அவன் அவளது சொக்கில் கிள்ளினான்’