தமிழ் சொகுசு யின் அர்த்தம்

சொகுசு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்தது.

  ‘அவன் சொகுசான வாழ்க்கைக்குப் பழகிப்போய்விட்டான்’
  ‘சங்க உறுப்பினர்கள் சொகுசுப் பேருந்தில் சுற்றுலா மேற்கொண்டனர்’
  ‘சொகுசு மெத்தை’
  ‘சொந்த வீட்டில் சொகுசாக வாழ்வதை விட்டுவிட்டு வாடகை வீட்டில் அவஸ்தைப்படுகிறார்’