தமிழ் சொடுக்கு யின் அர்த்தம்

சொடுக்கு

வினைச்சொல்சொடுக்க, சொடுக்கி

 • 1

  (சாட்டை முதலியவற்றை) வீசி இழுத்தல்; (முதலை, பாம்பு முதலியவை வாலை) ஒலி வரும்படி அடித்தல்.

  ‘சாட்டையைச் சொடுக்கியதும் மாடு வேகமாக ஓடத் தொடங்கியது’
  ‘பாம்பு வாலைச் சொடுக்கியது’

 • 2

  சொடக்குப் போடுதல்.

  ‘கை சொடுக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது’