தமிழ் சொத்துப்பத்து யின் அர்த்தம்

சொத்துப்பத்து

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகளும் அவை போன்ற மதிப்புடைய பிறவும்.

  ‘எனக்கு இருக்கும் சொத்துப்பத்தெல்லாம் இரண்டு ஏக்கர் நிலமும் இந்த வீடும்தான்’
  ‘கல்யாண வயதில் இரண்டு பெண்கள் இருக்கும்போது சொத்துப்பத்து வாங்க ஆசைப்பட முடியுமா?’
  ‘சொத்துப்பத்தையெல்லாம் குடித்தே அழித்தவர்கள் பலர்’
  ‘அவருடைய சொத்துப்பத்து ஒரு கோடிக்கு மேல் தேறும்’