தமிழ் சொந்த யின் அர்த்தம்

சொந்த

பெயரடை

 • 1

  (இடத்தைக் குறிக்கும்போது) தான் பிறந்ததால் அல்லது தன்னுடைய முன்னோர் பிறந்ததால் தன்னைச் சார்ந்தது என்று ஒருவர் கருதும்.

  ‘பணியிலிருந்து ஓய்வுபெற்றதும் தன் சொந்த ஊருக்குப் போய்விட்டார்’
  ‘என்ன இருந்தாலும் சொந்த ஊரில் இருப்பதுபோல் வருமா?’
  ‘சொந்த நாடு’

 • 2

  தனக்கே உரித்தான.

  ‘சொந்த வீடு’
  ‘சொந்த கார்’

 • 3

  (உறவைக் குறிக்கும்போது) உடன்பிறந்த; தான் பெற்ற; தனக்கு நேர் உறவான.

  ‘இவன் என் சொந்தத் தம்பி’
  ‘இவன் சொந்த மகன் இல்லை. என் அண்ணன் மகன்’
  ‘சொந்த அத்தையின் பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்’

 • 4

  தனக்கே உரிய; தனிப்பட்ட; சுய.

  ‘அநாவசியமாக என் சொந்த விஷயத்தில் தலையிடாதே’
  ‘நடிகர் தன் சொந்தக் குரலில் பாடிய பாட்டு’

 • 5

  தனிப்பட்ட முறையில் தானே முன்நின்று மேற்கொள்ளும்.

  ‘அவர் சொந்தத் தொழில் செய்கிறார்’
  ‘என் சொந்தப் பொறுப்பில் அவனை ஜாமீனில் எடுத்தேன்’