தமிழ் சொந்தம் யின் அர்த்தம்

சொந்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்கு உள்ள) உரிமை.

  ‘இந்த வீடு யாருக்குச் சொந்தம் என்பதில் சகோதரர்களுக்குள் தகராறு’
  ‘அவர் சொந்தமாக ஒரு கார் வைத்திருக்கிறார்’

 • 2

  தான் பிறந்த குலத்தின் மூலமாக அல்லது தன் திருமணத்தின் மூலமாக ஏற்படும் தொடர்பு; உறவு.

  ‘என் பாட்டி வழியில் அவர் எனக்குத் தூரத்துச் சொந்தம்’
  ‘பணம் இருந்தால் எல்லோரும் சொந்தம் கொண்டாடுவார்கள்’