தமிழ் சொரி யின் அர்த்தம்

சொரி

வினைச்சொல்சொரிய, சொரிந்து

 • 1

  பெருமளவில் கீழ்நோக்கிச் செல்லுமாறு விடுதல் அல்லது பெருமளவில் கீழ்நோக்கி விழுதல்; பொழிதல்; கொட்டுதல்.

  ‘மேகங்கள் மழையைச் சொரிந்தன’
  ‘பூச்சொரிந்து வரவேற்றனர்’
  உரு வழக்கு ‘பேச்சில் அன்பு சொரிகிறது’

 • 2

  (பெரும்பாலும் ‘பூத்தல்’, ‘காய்த்தல்’ ஆகிய வினைகளுடன்) நிறைந்திருத்தல்.

  ‘தோட்டத்தில் பூக்கள் பூத்துச் சொரிந்திருக்கின்றன’