தமிழ் சொல்லிக்கொள் யின் அர்த்தம்

சொல்லிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (போய்வருவதாகச் சொல்லி) விடைபெறுதல்.

    ‘தாத்தாவிடம் சொல்லிக்கொண்டு புறப்படு’

  • 2

    (ஒன்றை வாய்மொழியாக) கற்றுக்கொள்ளுதல்.

    ‘நீங்கள் யாரிடம் வேதம் சொல்லிக்கொண்டீர்கள்?’