தமிழ் சௌஜன்யம் யின் அர்த்தம்

சௌஜன்யம்

(சௌஜன்னியம்)

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பழகுதல், பேசுதல் முதலியவற்றில் காட்டும்) சுமுகம்; இனிய குணம்.

    ‘அவர் எல்லோரிடமும் சௌஜன்னியமாகப் பழகுவார்’

  • 2

    அருகிவரும் வழக்கு அன்னியோன்னியம்; நெருக்கம்.

    ‘எதையாவது பேசி எங்கள் இருவருக்கிடையே உள்ள சௌஜன்னியத்தைக் கெடுத்துவிடாதே’