தமிழ் சேகரி யின் அர்த்தம்

சேகரி

வினைச்சொல்சேகரிக்க, சேகரித்து

  • 1

    (பொருள், தகவல் போன்றவற்றை ஒரு இடத்திலிருந்து அல்லது ஒருவரிடமிருந்து) பெறுதல் அல்லது பெற்று ஒன்றுதிரட்டுதல்; சேர்த்தல்.

    ‘அவர் பழைய நாணயங்களைச் சேகரித்துவைத்திருக்கிறார்’
    ‘சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற இடங்களிலிருந்து புனிதமண் சேகரிக்கப்பட்டது’
    ‘தகவல்களை நிறையச் சேகரித்துக்கொண்ட பிறகுதான் நாம் அவருடன் பேச வேண்டும்’