தமிழ் சேட்டை யின் அர்த்தம்

சேட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (குழந்தையின்) குறும்பு.

  ‘புத்தகம் படிப்பதில் விருப்பம் ஏற்பட்டுவிட்டால் குழந்தைகள் சேட்டைசெய்வது குறைந்துவிடும்’

 • 2

  கோமாளித்தனமான முக பாவனைகள், அங்க அசைவுகள் போன்ற வேடிக்கைச் செயல்.

  ‘கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாதா? குரங்குபோல் சேட்டைபண்ணுகிறாயே’

 • 3

  விஷமத்தனமான செயல்.

  ‘இந்தப் பகுதியில் ரவுடிகளின் சேட்டை தாங்க முடியவில்லை’
  ‘பெண்களிடம் சேட்டை செய்த இளைஞனைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்’