தமிழ் சேதம் யின் அர்த்தம்

சேதம்

பெயர்ச்சொல்

 • 1

  (புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உயிர், பொருள்) அழிவு.

  ‘வெள்ளத்தால் குறுவைப் பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன’

 • 2

  (உடைதல், நொறுங்குதல் போன்றவற்றால் பொருள்களுக்கு ஏற்படும்) கேடு.

  ‘முத்துகளுக்குச் சேதம் ஏற்படாமல் மெருகு ஏற்றப்பட்டது’

 • 3

  (வன்முறைச் செயல்களினால் நிகழும்) பாதிப்பு.

  ‘நேற்று கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்திருக்கிறார்கள்’