தமிழ் சேமி யின் அர்த்தம்

சேமி

வினைச்சொல்சேமிக்க, சேமித்து

 • 1

  (பணம், நகை போன்றவற்றை) எதிர்காலப் பயன்பாட்டுக்காகச் சேர்த்தல்.

  ‘உழைக்க முடிந்த காலத்தில் பணம் சேமித்ததால்தான் இப்போது, ஓய்வுபெற்ற காலத்தில் சுகமாக வாழ முடிகிறது’
  ‘பெண்ணின் திருமணத்திற்காகக் கொஞ்சம்கொஞ்சமாக நகைகளும் பாத்திரங்களும் சேமித்து வைத்திருக்கிறேன்’

 • 2

  (பொருள், ஆற்றல் முதலியவற்றை ஒரு இடத்தில்) சேகரித்து வைத்தல்.

  ‘ஏரிகளை ஆழப்படுத்தினால் அதிகத் தண்ணீரைச் சேமித்து வைக்கலாம்’
  ‘அரசுக் களஞ்சியங்களில் தானியங்கள் சேமிக்கப்படுகின்றன’
  ‘சூரிய வெப்பத்திலிருந்து பெறப்படும் மின்சக்தியைச் சேமித்து வைக்கும் அமைப்பு இந்த மின்கலத்தில் உண்டு’
  ‘கொழுப்பு நம் தோலின் அடியில் சேமிக்கப்படுகிறது’
  ‘வறண்ட நிலத் தாவரங்களின் வேர்கள் நீரைச் சேமிக்கின்றன’
  ‘கோரையின் வேர்ப்பகுதியில் உள்ள கிழங்குகள் உணவைச் சேமித்துக்கொள்கின்றன’
  ‘காந்தியைப் பற்றி நிறைய தகவல்களை இணையதளங்களிலிருந்து எடுத்துக் கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கிறேன்’
  ‘நீங்கள் கொடுக்கும் ரத்தம் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படும்’

 • 3

  கணிப்பொறியில் உள்ளீடு செய்த தகவல்கள் அழிந்துவிடாமல் அதன் நினைவகத்தில் இருக்கச் செய்தல்.

  ‘எழுதியவரையில் கதையைக் கணிப்பொறியில் சேமித்துவிட்டுப் படுக்கப்போனேன்’

 • 4

  (சக்தி, எரிபொருள் முதலானவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்தி) சிக்கனப்படுத்துதல்; (ஒன்றைக் குறைந்த நேரத்தில் செய்வதன்மூலம் நேரத்தை) மிச்சப்படுத்துதல்.

  ‘எரிபொருளைச் சேமிப்பதற்கான நுட்பங்களைத் தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டும்’
  ‘கணிப்பொறி நம் வேலையைச் சுலபமாக்கி நேரத்தைச் சேமிக்க உதவுகிறது’