தமிழ் சேமிப்பு யின் அர்த்தம்

சேமிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (எதிர்காலத் தேவை கருதி ஒன்றை) சேமிக்கும் செயல் அல்லது (ஒன்று) சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை.

  ‘சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’
  ‘அப்பாவின் சேமிப்பைக் கொண்டுதான் இந்தத் தொழிலை ஆரம்பித்திருக்கிறேன்’
  ‘திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்குச் சேமிப்புதான் கைகொடுக்கிறது’
  ‘நெல் சேமிப்புக் கிடங்கு’
  ‘குடிநீர் சேமிப்புக்கான வசதிகளைப் பெருக்க வேண்டும்’
  ‘இரத்தச் சேமிப்பு நிலையம்’