தமிழ் சேர்க்கை யின் அர்த்தம்

சேர்க்கை

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலை; ஒன்றை ஒன்றுடன் சேர்க்கும் செயல்.

  ‘கவிதை என்பது சொற்களின் சேர்க்கையால் மட்டும் உருவாவதில்லை’
  ‘வான்காவின் ஓவியத்தில் வண்ணங்களின் சேர்க்கை அற்புதமாக இருக்கும்’
  ‘ரசாயனச் சேர்க்கை’
  உரு வழக்கு ‘காதல் என்பது இரு இதயங்களின் சேர்க்கை’

 • 2

  தொடர்பு; நட்பு.

  ‘நல்லவர்களின் சேர்க்கையை நாடு!’
  ‘கூடாதவர்களின் சேர்க்கையால்தான் அவன் இப்படிக் கெட்டுப்போய்விட்டான்’

 • 3

  உயர் வழக்கு உடலுறவின் மூலம் இருவர் இணையும் செயல்.

  ‘ஆண், பெண் சேர்க்கையின் வெவ்வேறு நிலைகளைச் சித்தரிக்கும் சிற்பங்கள்’

 • 4

  அருகிவரும் வழக்கு (ஏற்கனவே இருப்பதுடன்) கூடுதலாக இணைவது; சேர்வது.

  ‘இந்தச் சடங்குகளெல்லாம் சமீப காலத்துச் சேர்க்கைகள்தான்’

 • 5

  பெருகிவரும் வழக்கு (பள்ளி, கல்லூரி முதலியவற்றில் மாணவர்களை) சேர்த்துக்கொள்ளுதல்.

  ‘அஞ்சல்வழிக் கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பு’

 • 6

  சோதிடம்
  ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட வீடுகளில் அமைந்திருந்து வேறு வீடுகளின் மீது அதிகாரம் செலுத்தும் நிலை.

  ‘கிரகச் சேர்க்கைதான் அவனை ஆட்டிவைக்கிறது’