தமிழ் சேர்மானம் யின் அர்த்தம்

சேர்மானம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றை மற்றொன்றுடன் இணைக்கும்போது அல்லது கலக்கும்போது) சேர்க்கப்படும் நிலை அல்லது விகிதம்.

  ‘தாளச் சேர்மானம் சரியாக இருந்தது’
  ‘கலவைக்குத் தண்ணீர் சேர்மானம் போதாது’

 • 2

  பேச்சு வழக்கு சேர்க்கை; சகவாசம்.

  ‘உங்கள் பையனின் சேர்மானம் சரியில்லை; கொஞ்சம் கண்டித்துவையுங்கள்’

 • 3

  பேச்சு வழக்கு திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளுதல்.

  ‘பக்கத்து ஊரில் இவனுக்கு ஒரு பெண்ணுடன் சேர்மானம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்’