தமிழ் சேற்றை வாரி இறை யின் அர்த்தம்

சேற்றை வாரி இறை

வினைச்சொல்இறைக்க, இறைத்து

  • 1

    (ஒருவர்மீது உள்ள கசப்புணர்வால் அவரைப் பற்றி) அவதூறு சொல்லுதல்.

    ‘அவர் என்மீது வேண்டுமென்றே சேற்றை வாரி இறைக்கிறார். இதை யாரும் நம்பிவிடாதீர்கள்’
    ‘நண்பர்களுக்குள் ஏதோ தகராறு போலிருக்கிறது. அதனால் தான் மாறிமாறிச் சேற்றை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்’