தமிழ் சேவி யின் அர்த்தம்

சேவி

வினைச்சொல்சேவிக்க, சேவித்து

 • 1

  (இறைவனை) வழிபடுதல்; வணங்குதல்.

  ‘தில்லை சென்று நடராஜரைச் சேவித்து வந்தார்’

 • 2

  (மூத்தவர்களுக்கு, மதத் தலைவர்களுக்குத் தரையில் விழுந்து) வணக்கத்தைத் தெரிவித்தல்.

  ‘‘சுவாமி, சேவிக்கிறேன்’ என்று கூறித் தரையில் விழுந்து வணங்கினார்’

 • 3

  கோயில்களில் (திவ்யப் பிரபந்தம்) ஓதுதல்.

  ‘பிரபந்தம் சேவிக்கப்படும்போது இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதில்லை’