சேவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சேவை1சேவை2

சேவை1

பெயர்ச்சொல்

 • 1

  மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி.

  ‘சமூக சேவை’
  ‘மருத்துவ சேவை’
  ‘எங்கள் வங்கி புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது’
  ‘சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பது சேவையைப் பொறுத்தே அமையும்’

 • 2

  (பெற்றோர், குரு போன்றோருக்குச் செய்யும்) தொண்டு.

  ‘பெற்றோருக்குச் சேவை செய்வதைப் புண்ணியமாகக் கருதினார்’

 • 3

  (ஒரு துறையில் அல்லது நிறுவனத்தில்) ஆற்றும் பணி.

  ‘அவருடைய முப்பது ஆண்டு சேவையைப் பாராட்டி நிர்வாகம் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது’
  ‘இவர் காவல்துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தைப் பெற்றவர்’

 • 4

  (அரசர் போன்றோருக்கு) ஊழியம்; சேவகம்.

  ‘திருவனந்தபுர சமஸ்தான சேவை’

 • 5

  (கடவுளை அல்லது கடவுளுக்கு உரியதை) தரிசனம் செய்தல்.

  ‘கருட சேவை’

சேவை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சேவை1சேவை2

சேவை2

பெயர்ச்சொல்

 • 1

  அரிசி மாவை நூல்போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு; இடியாப்பம்.