தமிழ் சோகம் யின் அர்த்தம்

சோகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (இழப்பு, தோல்வி முதலியவை) மனத்தை வருத்தும் துக்க உணர்வு.

    ‘நீங்கள் இப்போதுள்ள சோகமான நிலையில் வெளியில் எங்கும் கிளம்ப வேண்டாம்’
    ‘என் சோகங்களை நான் யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை’
    ‘முகத்தை ஏன் சோகமாக வைத்திருக்கிறாய்?’