தமிழ் சோடை யின் அர்த்தம்

சோடை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (கடலை முதலியவற்றைக் குறித்து வரும்போது உள்ளே) பருப்பு இல்லாத நிலை.

  ‘இந்தத் தடவை நீங்கள் கொடுத்த கடலையெல்லாம் ஒரே சோடை’

 • 2

  பேச்சு வழக்கு (புத்திக்கூர்மை, சாமர்த்தியம் முதலிய) சிறந்த தன்மைகள் இல்லாத நிலை.

  ‘‘என் பிள்ளைகளில் எவனும் சோடை இல்லை’ என்று அவர் பெருமையடித்துக்கொண்டார்’

தமிழ் சோடை யின் அர்த்தம்

சோடை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (மாட்டு வண்டிகள் போய்வருவதால் ஏற்பட்ட) தடம்.

  ‘இவை நன்கு பழகிய மாடுகள்; சோடை பிடித்து வீட்டுக்குப் போய்விடும்’