தமிழ் சோதனை யின் அர்த்தம்
சோதனை
பெயர்ச்சொல்
- 1
விஞ்ஞானரீதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை.
‘விண்வெளி ஆராய்ச்சியில் நாங்கள் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறோம்’ - 2
சட்ட விரோதமான நடவடிக்கைகள், திருட்டு போன்றவற்றைக் கண்டுபிடிப்பதற்காக (ஒருவரிடம் அல்லது ஒருவருடைய வீடு, வாகனம் போன்றவற்றில் அவற்றுக்கான தடயங்களை) தேடும் செயல்.
‘அந்த வாகனத்தைக் காவலர் சோதனை செய்தபோது அதில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கடத்தல் பொருள்கள் சிக்கின’‘சோதனைச் சாவடி’‘அந்த நூலகத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரையும் ஒரு ஆள் சோதனை செய்துகொண்டிருந்தார்’ - 3
ஒரு துறையில் புதிய உத்திகள், யோசனைகள் ஆகியவற்றைக் கொண்டு முதலில் செய்து பார்ப்பது.
‘இந்த நாவல் ஒரு சோதனை முயற்சி’‘இந்த இளம் இயக்குனர் சோதனைரீதியாகப் பல படங்கள் எடுத்திருக்கிறார்’ - 4
(வாழ்க்கையில் நேரும்) துன்பம், கஷ்டம், தடை முதலியவை.
‘அந்தக் குடும்பத்திற்கு இது ஒரு சோதனைக் காலம் போலிருக்கிறது’‘எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வந்து இன்று அவர் வெற்றிகரமான தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார்’ - 5
(தரம், விசுவாசம் முதலியவற்றை அறிவதற்காக ஒன்றை அல்லது ஒருவரை) சோதித்துப் பார்த்தல்; பரிசோதனை.
‘அவனுடைய திறமையைச் சோதனை செய்து பார்க்க வேண்டும்’‘கடவுள் ஏன் என்னை இப்படிச் சோதனை செய்கிறார்?’ - 6
இலங்கைத் தமிழ் வழக்கு தேர்வு; பரீட்சை.
‘சோதனைக்குப் படிக்க வேண்டும்’