தமிழ் சோதனைபூர்வமாக யின் அர்த்தம்

சோதனைபூர்வமாக

வினையடை

  • 1

    (கலை, இலக்கியத்தில்) புதிய உத்திகளைப் பயன்படுத்தும் வகையில்.

    ‘சோதனைபூர்வமாக நிறைய கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது’

  • 2

    (ஒரு புதிய கோட்பாடு, கருதுகோள், கண்டுபிடிப்பு முதலியவற்றை) சோதித்துப்பார்க்கும் வகையில்; பரீட்சார்த்தமாக.

    ‘அந்த மருந்து சோதனைபூர்வமாக விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்டபோது நல்ல பலன் இருந்தது’