தமிழ் சோதி யின் அர்த்தம்

சோதி

வினைச்சொல்சோதிக்க, சோதித்து

 • 1

  (ஒருவரின் நோய் அல்லது ஒன்றின் குறைபாடுகளை) சோதனைமூலம் அறிதல்.

  ‘அவருடைய இரத்தத்தைச் சோதித்ததில் நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது’
  ‘இயந்திரத்தைச் சோதித்துப்பார்த்ததில் மின்இணைப்புகள் விட்டுப்போயிருந்ததைக் காண முடிந்தது’

 • 2

  (சந்தேகத்தின் பேரில்) துருவிப்பார்த்தல்; சோதனை மேற்கொள்ளுதல்.

  ‘அந்த விமானப் பயணியின் பெட்டியைச் சுங்க அதிகாரி மீண்டும்மீண்டும் சோதித்துப்பார்த்தார்’

 • 3

  (ஒருவருடைய இயல்பு, திறமை, பயிற்சி, தகுதி முதலியவற்றை அல்லது ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதற்காக) சோதனைசெய்தல்.

  ‘மாணவர்களுடைய திறமையைச் சோதித்துப்பார்ப்பதற்கு எழுத்துத் தேர்வை விடச் செய்முறைத் தேர்வுதான் சிறந்தது’
  ‘கடவுளே! ஏன் எங்களை இப்படிச் சோதிக்கிறாய்?’
  உரு வழக்கு ‘என் பொறுமையைச் சோதிக்காதே’

தமிழ் சோதி யின் அர்த்தம்

சோதி

பெயர்ச்சொல்