தமிழ் சோபி யின் அர்த்தம்

சோபி

வினைச்சொல்சோபிக்க, சோபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவர் ஒரு துறையில் அல்லது செயலில்) சிறப்பாக விளங்குதல்/ (ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சி) சிறப்பாக அமைதல்.

    ‘இன்றைய விளையாட்டில் இந்திய அணித் தலைவரின் ஆட்டம் சோபிக்கவே இல்லை’
    ‘குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தன்னால் சோபிக்க முடியும் என்று அந்த நடிகை நிரூபித்திருக்கிறார்’
    ‘எதிர்பார்த்த கூட்டம் வராததால் விழா சோபிக்காமல் போய்விட்டது’