தமிழ் சோம்பல் யின் அர்த்தம்

சோம்பல்

பெயர்ச்சொல்

 • 1

  உடலிலும் மனத்திலும் உணரும் ஊக்கமின்மை; சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை; மந்தம்.

  ‘ஐந்தடி தள்ளி இருக்கும் கடைக்குப் போகக்கூடச் சோம்பலா?’
  ‘சாப்பிடுவதற்குக்கூடச் சோம்பல்படுகிற ஆசாமி அவன்’
  ‘‘நீங்கள் அதிகம் எழுதுவதில்லையே, என்ன காரணம்?’ என்று கேட்டதற்கு ‘சோம்பல்தான் காரணம்’ என்று பதிலளித்தார்’

 • 2

  நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பதால் உடலில் தோன்றும் மந்த நிலை.