தமிழ் சோர்வு யின் அர்த்தம்

சோர்வு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலை; அயர்ச்சி.

  ‘தொடர்ந்து இரண்டு மணி நேரம் படித்தால் கண் சோர்வு அடைந்து விடுகிறது’
  ‘தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டதால் சோர்வாகப் பேசினார்’
  ‘பாதி திறந்திருந்த சோர்வான கண்கள்’
  ‘சோர்வான நிலையில் எழுந்து நிற்கக்கூட அவரால் முடியவில்லை’