சோறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சோறு1சோறு2

சோறு1

பெயர்ச்சொல்

 • 1

  வேகவைக்கப்பட்ட அரிசி; சாதம்.

  ‘இரவுச் சாப்பாட்டுக்குச் சோறும் பொரியலும் போதும்’
  ‘ரசம் விட்டுச் சோற்றைக் குழைத்துச் சாப்பிட்டார்’

 • 2

  (பொதுவாக) உணவு.

  ‘ஒரு வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் திண்டாடுகிறான்’

சோறு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சோறு1சோறு2

சோறு2

பெயர்ச்சொல்

 • 1

  பனைமரத்தின் தண்டு, கற்றாழை மடல் முதலியவற்றின் உள்ளே காணப்படும் சதைப்பற்றான வெண்ணிறப் பொருள்.

  ‘கற்றாழையின் சோற்றை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்’