தமிழ் ஜடம் யின் அர்த்தம்

ஜடம்

பெயர்ச்சொல்

 • 1

  உயிரற்ற பொருள்; பருப்பொருள்.

  ‘என்னதான் இருந்தாலும் கணிப்பொறி ஜடம்தான்’
  ‘ஜடம் மாதிரி நிற்காமல் போய் வேலையைப் பார்’

 • 2

  (ஒருவரைத் திட்டும்போது) உணர்ச்சியோ புத்திக் கூர்மையோ இல்லாத நபர்.

  ‘எது சொன்னாலும் அந்த ஜடத்துக்கு உறைக்காது’