தமிழ் ஜபர்தஸ்து யின் அர்த்தம்

ஜபர்தஸ்து

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவரின் பதவி, அந்தஸ்து போன்றவற்றை வெளிப்படுத்தும்) மிடுக்கான தோரணை.

    ‘அரசு உத்தியோகத்தில் நாற்பது வருடம் ஜபர்தஸ்து பண்ணி ஓய்ந்துவிட்டார்’
    ‘வசதி போனதும் அவருடைய ஜபர்தஸ்தும் போய்விட்டது’
    ‘எதற்கு இந்த வெட்டி ஜபர்தஸ்து?’