தமிழ் ஜம்மென்று யின் அர்த்தம்

ஜம்மென்று

வினையடை

 • 1

  பிரமாதமாக; நேர்த்தியாக.

  ‘இந்த வண்டிக்கு என்ன குறைச்சல், ஜம்மென்று வெண்ணெய் போல வழுக்கிக்கொண்டு ஓடுமே’
  ‘பட்டுப் புடவையில் ஜம்மென்று இருந்தாள்’

 • 2

  வசதியாக; சௌகரியமாக.

  ‘நாற்காலியின் மீது குழந்தை ஜம்மென்று உட்கார்ந்திருந்தது’
  ‘கார்தான் இருக்கிறதே, ஜம்மென்று கல்யாணத்துக்குப் போய்விட்டு வா!’