தமிழ் ஜீவன் யின் அர்த்தம்

ஜீவன்

பெயர்ச்சொல்

 • 1

  உயிர்.

  ‘இன்னும் ஜீவன் போகவில்லை’
  ‘குழந்தைக்காகத்தான் இந்த ஜீவனை வைத்துக்கொண்டிருக்கிறேன்’

 • 2

  உயிர் வாழ்பவர் அல்லது உயிர்வாழ்வது.

  ‘இந்த வருமானத்தில் ஐந்து ஜீவன்கள் உயிர்வாழ வேண்டும்’
  ‘வாயில்லா ஜீவனைத் துன்புறுத்தாதே’

 • 3

  (உயிரோடிருப்பவை பெற்றிருக்கும்) சக்தி.

  ‘அந்தக் குழந்தைக்கு அழுவதற்குக்கூட ஜீவன் இல்லை, என்ன கொடுமை!’

 • 4

  உயிரோட்டம்.

  ‘ஜீவன் நிறைந்த நாடகம்’
  ‘ஜீவன் இல்லாத கவிதை’