தமிழ் ஜீவி யின் அர்த்தம்

ஜீவி

வினைச்சொல்ஜீவிக்க, ஜீவித்து

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு உயிர்வாழ்தல்; வாழ்க்கை நடத்துதல்.

  ‘ஏதோ இந்தக் கடையில் வரும் வருமானத்தை வைத்துதான் ஜீவித்துவருகிறோம்’

தமிழ் ஜீவி யின் அர்த்தம்

ஜீவி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பொதுவாக) உயிரினம்; (குறிப்பாக) மனிதன்.

  ‘இப்படி ஒரு ஜீவியை நான் பார்த்ததே இல்லை’
  ‘சுதந்திர இந்தியாவில் சுதந்திர ஜீவியாகவே அவர் மரணமடைய ஆசைப்பட்டார்’