தமிழ் ஜாக்கிரதை யின் அர்த்தம்

ஜாக்கிரதை

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஒன்றைச் செய்வதில் மிகுந்த) கவனம்; எச்சரிக்கை உணர்வு.

  ‘பணத்தைத் தொலைத்துவிடாதே. ஜாக்கிரதையாகக் கொண்டுபோ’
  ‘பொதுவாழ்வில் உள்ளவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்’
  ‘எந்தச் சிறு குறைபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் வெகு ஜாக்கிரதையாகச் செய்திருந்தார்’
  ‘பாலத்தைக் கடக்கும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’
  ‘மரத்தில் ஜாக்கிரதையாக ஏறு’
  ‘வயதானவர்களைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது’
  ‘படுத்துக் கிடந்த நாயை மிதித்துவிடாமல் ஜாக்கிரதையுடன் நடந்தான்’

 • 2

  கவனம் தேவை என்னும் முன்னறிவிப்பு.

  ‘வீட்டின் வெளிச்சுவரில் ‘நாய்கள் ஜாக்கிரதை‘ என்ற பலகை தொங்கியது’

 • 3

  (ஒருவரை) எச்சரிக்கும் விதமாகக் கூறும்போது பயன்படுத்தும் சொல்.

  ‘ஜாக்கிரதை! இதைப் பற்றி வெளியில் யாரிடமும் மூச்சுவிடக் கூடாது’