தமிழ் ஜாடி யின் அர்த்தம்

ஜாடி

பெயர்ச்சொல்

  • 1

    அகன்ற வாய்ப் பகுதியும் நீள்உருண்டை வடிவ நடுப் பகுதியும் கொண்ட, பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்.

    ‘ஊறுகாய் ஜாடி’

  • 2

    (நீர் முதலியவை வைக்கப் பயன்படும்) நீண்ட கழுத்துப் பகுதியும் உருண்டையான நடுப் பகுதியும் கொண்ட, மண் முதலியவற்றால் ஆன பாத்திரம்.

    ‘மண் ஜாடியைச் சாய்த்துக் குவளையில் தண்ணீர் பிடித்துக் குடித்தான்’