தமிழ் ஜாதி யின் அர்த்தம்

ஜாதி

பெயர்ச்சொல்

 • 1

  (இந்து சமூகத்தில்) சில பழக்கவழக்கங்களைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் ஒருவருடைய குடும்பத்தினர், உறவினர் போன்றவர்களைச் சார்ந்திருப்பதும் பல படி நிலைகளில் அமைக்கப்பட்டதுமான பிரிவு.

  ‘வேறு ஜாதியில் கல்யாணம்செய்துகொண்டான்’
  ‘இந்த நவீன காலத்திலுமா மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்துப் பேசுகிறார்கள்?’

 • 2

  இனம்.

  ‘ஆண் ஜாதி’
  ‘பெண் ஜாதி’
  ‘மனித ஜாதி’

 • 3

  உயர்ந்த ரகம் அல்லது இனம்.

  ‘அவர் வீட்டில் இருப்பது ஜாதி நாய்’
  ‘ஜாதிப் பசு’