தமிழ் ஜால்ராப்போடு யின் அர்த்தம்

ஜால்ராப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு உயர் நிலையிலிருப்பவர் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஒப்புக்கொண்டு ஆமோதித்தல்; ஒத்தூதுதல்.

    ‘அந்தப் பணக்காரரைச் சுற்றி எப்போதும் ஜால்ராப் போடும் கும்பல் ஒன்று இருக்கும்’
    ‘பெரிய நடிகருக்கு ஜால்ராப்போட்டால்தான் அடுத்த படத்தில் வாய்ப்புக் கிடைக்கும்’