தமிழ் ஜென்மம் யின் அர்த்தம்

ஜென்மம்

பெயர்ச்சொல்

 • 1

  பிறவி.

  ‘அடுத்த ஜென்மம் என்று ஒன்று உண்டா?’
  ‘நீங்கள் செய்த உதவிக்கு இந்த ஜென்மம் முழுவதும் நன்றி உடையவனாக இருப்பேன்’

 • 2

  விசித்திரமான அல்லது விரும்பத்தகாத குணங்களை உடைய ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.

  ‘‘இப்படியும் ஒரு ஜென்மமா?’ என்று அவரைப் பார்த்து அந்தப் பெண் வியந்தாள்’
  ‘‘சில ஜென்மங்களைத் திருத்தவே முடியாது’ என்று பக்கத்தில் நிற்பவன் காதில் விழும்படி நண்பர் என்னிடம் சொன்னார்’

 • 3

  (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) ஒருவர் பிறந்த நேரத்துக்கு உரியது.

  ‘ஜென்ம ராசி’
  ‘ஜென்ம நட்சத்திரம்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு ஆயுள் தண்டனை.

  ‘அவனுக்கு ஜென்மம் விதித்துவிட்டார்கள்’