தமிழ் ஜொலி யின் அர்த்தம்

ஜொலி

வினைச்சொல்ஜொலிக்க, ஜொலித்து

 • 1

  மின்னுதல்; பளபளத்தல்.

  ‘திரையில் வண்ணங்கள் ஜொலித்தன’
  ‘வானில் ஜொலிக்கும் நட்சத்திரம்’
  ‘ஜொலிக்கும் நகைகள்’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒருவர் ஒரு துறையில்) சிறந்து விளங்குதல்.

  ‘பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கதாநாயகி வேடத்தில் ஜொலித்த அவர் இப்போது அம்மா வேடங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்’