ஜோடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஜோடி1ஜோடி2ஜோடி3

ஜோடி1

வினைச்சொல்ஜோடிக்க, ஜோடித்து

 • 1

  அலங்கரித்தல்.

  ‘கடை வாசலை விளக்குகளால் ஜோடித்திருந்தனர்’
  ‘பல்லக்கை மிகவும் அழகாக ஜோடித்தார்கள்’

ஜோடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஜோடி1ஜோடி2ஜோடி3

ஜோடி2

வினைச்சொல்ஜோடிக்க, ஜோடித்து

 • 1

  பொய்யாகப் புனைதல்; கற்பித்தல்.

  ‘‘இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது’ என்று கேட்டதற்கு ஒரு கதையை ஜோடித்துச் சொல்லிவிட்டான்’
  ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்மீது நிர்வாகம் பொய் வழக்குகளை ஜோடித்திருக்கிறது’

ஜோடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஜோடி1ஜோடி2ஜோடி3

ஜோடி3

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு செயல்பாட்டில் ஒன்றாக ஈடுபடும் இருவர்; இரண்டாக இருப்பது; இணை.

  ‘குழுத் தலைவரோடு ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினான்’
  ‘ஒரு ஜோடி செருப்பு’
  ‘ஒரு ஜோடி உழவு மாடுகள்’
  ‘இன்றைக்கு ஒரு ஜோடி தங்க வளையலின் விலை என்ன என்று உனக்குத் தெரியமா?’

 • 2

  ஆண் பெண்.

  ‘ஒரு இளம் ஜோடி சிரித்துப் பேசிக்கொண்டே சென்றது’

 • 3

  (காதலர்கள், தம்பதிகள் அல்லது இணையாக இருக்கும் விலங்குகளில்) ஆண் அல்லது பெண்; துணை.

  ‘தன் ஜோடியைப் பிரிந்த மான் மருண்டு நின்றது’
  ‘உனக்கு ஏற்ற ஜோடியைத்தான் நீ தேர்ந்தெடுத்திருக்கிறாய்’