தமிழ் ஞானம் யின் அர்த்தம்

ஞானம்

பெயர்ச்சொல்

 • 1

  பிரபஞ்சத்துக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் உறவில் மனிதனுடைய வாழ்க்கை, நோக்கம் போன்றவற்றைக் குறித்து ஒருவர் பெறும் தெளிவு.

  ‘உண்மை ஞானம் என்பது என்ன?’
  ‘புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்’

 • 2

  (ஒரு துறையில்) அறிவு; பயிற்சி.

  ‘அவர் சட்ட ஞானம் உடையவர்’
  ‘அவன் சரித்திர ஞானம் இல்லாதவன்’