தமிழ் டப்பா அடி யின் அர்த்தம்

டப்பா அடி

வினைச்சொல்அடிக்க, அடித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பாடத்தைப் புரிந்துகொண்டு படிக்காமல்) மனப்பாடம் செய்தல்; நெட்டுருப்பண்ணுதல்.

    ‘கணக்குப் பாடத்தைக்கூடவா டப்பா அடிக்கிறாய்?’
    ‘பொறியியல் பாடங்களை டப்பா அடித்துத் தேர்வு எழுத முடியாது’