தமிழ் டிமிக்கி கொடு யின் அர்த்தம்

டிமிக்கி கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் தன்னைக் கண்காணிப்பவரின் கண்ணில் படாமல் அல்லது தான் போக வேண்டிய இடத்திற்குப் போகாமல்) ஏமாற்றி நழுவிவிடுதல்.

    ‘பள்ளிக்கூடம் போகாமல் இன்றைக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டாயா?’
    ‘பல தடவை காவலருக்கு டிமிக்கி கொடுத்த கேடி கைதானான்’
    ‘வாடகையே கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டு திரிகிறான்’