தமிழ் தகடு யின் அர்த்தம்

தகடு

பெயர்ச்சொல்

 • 1

  குறைந்த அளவு பருமனும் அதிகப் பரப்பும் கொண்ட உலோகத் துண்டு.

  ‘தங்கத் தகடு வேய்ந்த கூரை’
  ‘பித்தளைத் தகட்டில் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது’

 • 2

  (உலோகம் அல்லாததைக் குறிப்பிடும்போது) மெல்லியதாகவும் பரப்புடையதாகவும் இருப்பது.

  ‘கண்ணாடித் தகடு’
  ‘கல்நார்த் தகடு போடப்பட்ட வீடுகள்’

 • 3

  (ஒருவர் தனக்கு வேண்டாதவருக்குத் தீமை உண்டாக்கும் நோக்கத்தோடு வைக்கப்படுவதாக நம்பப்படும்) மந்திரங்கள் எழுதப்பட்ட செப்புத் தகடு.

  ‘வீட்டிற்குள் தகடு புதைக்கப்பட்டிருப்பதாகத் தாத்தா நம்பினார்’