தமிழ் தகதகவென்று யின் அர்த்தம்

தகதகவென்று

வினையடை

  • 1

    (நெருப்பைக் குறிக்கும்போது) அதிகமாகக் கொழுந்துவிட்டு.

    ‘அடுப்பில் தீ தகதகவென்று எரிந்துகொண்டிருந்தது’

  • 2

    (கண்ணைக் கூசச் செய்யும் வகையில்) ஜொலிப்புடன்.

    ‘வைரம் தகதகவென்று மின்னுகிறது’