தமிழ் தகராறு யின் அர்த்தம்

தகராறு

பெயர்ச்சொல்

 • 1

  கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை; மோதல்.

  ‘அந்த நிறுவனத்தினருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொழிற்சாலையை மூடும் நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டது’
  ‘எல்லைத் தகராறு’
  ‘வாடகைத் தகராறு’

 • 2

  முறைக்கு மாறான போக்கால் அல்லது ஒழுங்கு தவறுவதால் ஏற்படும் குழப்பம்; பிரச்சினை.

  ‘தம்பி குடித்துவிட்டு வந்து தகராறுசெய்தான்’
  ‘மண்ணெண்ணெய் வாங்க எல்லோரும் வரிசையில் நிற்காவிட்டால் தகராறுதான் ஏற்படும்’

 • 3

  (இயந்திரங்களைக் குறிப்பிடும்போது) ஒழுங்காக இயங்காததால் ஏற்படும் பிரச்சினை; கோளாறு.

  ‘பேருந்து கிளம்பாமல் தகராறு செய்தது’