தகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தகு1தகு2

தகு1

வினைச்சொல்தகும், தகுந்தது, தக்கது, தகுந்த, தக்க, தகாத போன்ற வடிவங்களில்

 • 1

  பொருத்தமானதாக அல்லது ஏற்றதாக அல்லது உரியதாக இருத்தல்.

  ‘அவரை ஒழுக்கசீலர் என்பது தகும்’
  ‘உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’
  ‘இந்தப் பரிசுக்கு அவள் தகுந்தவள்தான்’
  ‘காணாமல் போனவரைப் பற்றித் தகவல் தருவோருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்’
  ‘தக்க சமயத்தில் நண்பர் வந்து உதவினார்’
  ‘குற்றம் புரிந்தவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படும்’
  ‘திருவிழாவை முன்னிட்டுப் பயணிகள் தங்குவதற்குத் தகுந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன’
  ‘அவன் தகாத வார்த்தைகள் சொல்லித் திட்டினான்’

தகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தகு1தகு2

தகு2

துணை வினைதகும், தகுந்தது, தக்கது, தகுந்த, தக்க, தகாத போன்ற வடிவங்களில்

 • 1

  (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) ‘உரியதாக இருத்தல்’ என்னும் பொருளில் வரும் ஒரு துணை வினை.

  ‘அவருடைய சாதனை பாராட்டத் தக்கது’
  ‘பாராட்டத் தகுந்த செயல்’
  ‘செய்யத் தகாத செயல்’
  ‘பின்பற்றத் தகாத முறைகளைப் பின்பற்றித்தான் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா?’
  ‘அவையில் அவர் கூறிய கருத்துகள் குறிப்பிடத் தகுந்தவை என்று சொன்னால் அது மிகையல்ல’