தமிழ் தக்கை யின் அர்த்தம்

தக்கை

பெயர்ச்சொல்

 • 1

  லேசான தண்டைக் கொண்ட, மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும், நீர்நிலைகளில் வளரும் ஒரு வகைத் தாவரம்.

 • 2

  மேற்குறிப்பிட்ட செடியின் தண்டிலிருந்து செய்யப்படும் கனம் இல்லாத மிதக்கும் தன்மை உடைய பொருள்; நெட்டி.

  ‘தூண்டிலில் தக்கையை வைத்துக் கட்டினேன்’

 • 3

  கனம் இல்லாத தன்மை.

  ‘உன் மகனுக்கு மூன்று வயது ஆகிறது என்கிறாய். ஆனால் இப்படித் தக்கையாக இருக்கிறானே’
  ‘மட்டை தக்கையாக இருப்பதால் தூக்கி விளையாடுவது எளிதாக உள்ளது’