தமிழ் தங்கம் யின் அர்த்தம்

தங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (நகை முதலியவை செய்யப் பயன்படும்) இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம்.

  ‘தங்கக் காசு’
  ‘தங்க வளையல்’
  ‘தங்க ஓடு வேய்ந்த கூரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ளது’

 • 2

  மிகவும் அன்பாக அல்லது செல்லமாக அழைக்கும்போது பயன்படுத்தப்படும் சொல்.

  ‘குழந்தையை ‘என் தங்கமே’ என்று கொஞ்சினாள்’

 • 3

  (ஒருவர் மனத்தைக் குறிக்கும்போது) உயர்ந்த பண்புகளை உடையது.

  ‘அம்மா மனசு தங்கம்’